Categories
அரசியல் மாநில செய்திகள்

MGR-ரின் பைலா படி நடக்குது…! தூங்குறமாதிரி நடிக்காதீங்க., எழுப்ப முடியாது – ஜெயக்குமார் பதிலடி

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நேற்று 51 நிமிடம் சிவி சண்முகம்பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் என்னென்ன சட்டப் பிரச்சனைகள்…  வைத்தியலிங்கம்  எழுப்பிய கேள்விகள்…  அந்த கேள்விகளுக்கு எல்லாம்  51 நிமிடம் அவர் விடை அளித்திருக்கிறார் என்று சொன்னால், அது கேட்டும் கேட்காத மாதிரி இருக்கிறார்களா, கண்டும் காணாத மாதிரி உள்ளார்களா, தூங்குபவர்களை எழுப்பலாம் ஆனால் தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது.

ஏனென்றால் எல்லாமே வந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் ஆரம்பித்தபோது…..  கழகத்தைப் பொறுத்தவரையில் இன்னும் 100 ஆண்டுகள், ஆயிரம் ஆண்டுகள் அதே மாதிரி புரட்சி தலைவி அம்மா அவர்கள் கழகத்தை கட்டிக்காத்து, நூறு ஆண்டுகள் வரை ஓங்கும் என்ற வகையிலே பைலா  போட்டுள்ளார்கள். அந்த பைலா சட்டப்படி தான் எல்லாமே வந்து நடைபெற்றது. எனவே அவர் வந்து திரும்பவும் கூட யூடியூப் எல்லாம் இருக்கிறது திரும்பவும் வைத்தியலிங்கத்தை பொறுத்தவரையில் அதை ஒழுங்காக கேட்டு ஒரு தெளிவு பெற்றால் நல்லது என தெரிவித்தார்.

யாரையுமே அவமதிக்க வேண்டும்  என்ற எண்ணம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கும் கிடையாது, அதே போல யாருக்கும் கிடையாது. எனவே எந்த ஒரு விரும்பத்தகாத சம்பவம் நடந்து இருந்தால் கண்டிப்பாக கண்டிக்கத்தக்கது. அதில் எந்த ஒரு மாறுபட்ட கருத்தும் இல்லை.  அவமரியாதை செய்ய வேண்டும் என்ற உள் நோக்கம் கிடையாது. அதாவது எங்களுடைய கட்சியினுடைய உச்சபட்ச அதிகாரம் கொண்டது  பொதுக்குழு மட்டும்தான், பொதுக்குழு எடுக்கின்ற முடிவு ஒற்றை தலைமை தான் நம்முடைய அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வேண்டும் என்பது. அது நிச்சயமாக பதினோராம் தேதி நிறைவேறும். அதில் எந்தவித மாறுபட்ட கருத்தும் இல்லை என தெரிவித்தார்.

Categories

Tech |