செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் நிர்வாகி கே.சி பழனிசாமி, அண்ணா திமுகவில் அம்மா அவர்கள் மறைவுக்குப் பிறகு இருக்கின்ற பிரச்சனையே என்னவென்றால் அடிமட்டத்தில் இருக்கின்ற தொண்டர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரிவது இல்லை. ஒரு பொதுக்குழு உறுப்பினர்களோ, கட்சியினுடைய முக்கியஸ்தர்களும் என்ன ?
– கருதுகிறார்களோ அதை கட்சியின் முடிவாக அடிமட்ட உறுப்பினர்களிடத்தில் திணிக்கப்படுகிறது. அப்போது அடிப்படை அண்ணா திமுக தொண்டர்கள் என்ன எண்ணுகிறார்கள் ? எது சரி என்று நினைக்கிறார்கள் ? என்கின்ற கருத்து பொதுவெளியில் வருவது இல்லை. என்னுடைய இந்த சுற்று பயணத்தினுடைய நோக்கம் அடிப்படை அண்ணா திமுக தொண்டர்கள்,
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்தில் பார்த்தீர்கள் என்றால் அடிக்கடி மாநாடுகள் நடத்துவார், தொண்டர்களின் கருத்தை அறிந்து தான் முடிவுகளை எடுப்பாரே ஒழிய சுற்றி இருக்கின்ற அமைச்சர்களோ, பொதுக்குழு உறுப்பினர்களோ, முக்கியஸ்தர்கள் கருத்துகளையோ கேட்டு அவர் எந்த முடிவையும் எடுக்க மாட்டார். ஆனால் துரதிஷ்டவசமாக அம்மா அவர்கள் காலத்திற்குப் பிறகு அந்த நடைமுறை என்பது மாறிவிட்டது என தெரிவித்தார்.