Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்தடுத்து பரபரப்பு….! MGR சிலை சேதம் – அதிமுகவினர் போராட்டம் …!!

சென்னையில் இருக்கக்கூடிய பெரியார், அண்ணா சிலைகளுக்கு தொடர்ந்து பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கக்கூடிய எம்ஜிஆர் சிலையின் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒத்து தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிமுகவினுடைய தென் சென்னை கிழக்கு மாவட்டத்தினுடைய செயலாளர் இருக்கக்கூடிய ஆதிராஜா ராம்  பார்வையிட்டு உடனடியாக இதில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

அதன் பிறகு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அதே போல் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் அவருடைய ஆதரவாளர்களுடன் வந்து சேதமடைந்த சிலையை நேரில் பார்வையிட்டு,  சேதபடுத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூறி இருக்கிறார்கள். இதனால் ஆயிரம் விளக்கு பகுதியில் ஒரு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்கள் யார்  என்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஓ பன்னீர்செல்வம் சிலை இருக்கும் பகுதியில் உள்ளர்வர்களிடம் சிலை எப்படி சேதம் அடைந்தது? யார் யாரெல்லாம் பராமரித்து வருகிறார்கள் ? என கேட்டறிந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக அதிமுக சார்பில் சிலை வைக்கப்பட்டிருந்தது. அதனால் அந்த சிலையை யார் பராமரித்து வருகின்றார்கள் என கேட்டிருந்தார். சிலையில் எம்ஜிஆர் உடைய மூக்கு பகுதி  சேதமடைந்துள்ளது. நேற்று அண்ணா சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Categories

Tech |