Categories
Uncategorized மாநில செய்திகள்

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் முதல் கட்ட வெற்றி – எம்.ஜி.ஆர் பல்கலை., அறிவிப்பு!

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் முதல் கட்ட வெற்றி பெற்றிருப்பதாக எம்.ஜி.ஆர் பல்கலை., அறிவித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் இதுவரை 1,77,459 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை நாடு முழுவதும் 19,984 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியி தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் முதல் கட்ட வெற்றி பெற்றிருப்பதாக எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் தகவல் அளித்துள்ளார்.

எனது தலைமையில் புஷ்கலா, தமன்னா அடங்கிய குழு முதற்கட்ட ஆய்வை நிறைவு செய்துள்ளது என அவர் கூறியுள்ளார். ரிவர்ஸ் வேக்ஸினாலஜி முறையில் கொரோனா வைரஸை தடுக்கும் புரதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை தடுக்கும் புரதத்துக்கு இதுவரை பெயரிடப்படவில்லை. பெயரிடப்படாத புரதத்தை விலங்குகள், மனிதர்களுக்கு செலுத்தி அடுத்தகட்ட ஆய்வு நடைபெறும் என அவர் அறிவித்துளளார்.

அடுத்தகட்ட ஆய்வு விரைவில் நடைபெற உள்ளது என்றும் ஓராண்டுக்குள் தடுப்பு மருந்துகள் செயல்பாட்டிற்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சித்த மருத்துவ துறையும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஆராய்ச்சி செய்து வருகிறது. அமெரிக்காவின் தடுப்பு மருந்து நிறுவனத்தோடு இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளோம். கண்டுபிடிப்பு அடுத்த கட்டத்திற்கு செல்லும்பட்சத்தில், தடுப்பூசி மூலம் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் உறுதி அளித்துள்ளார்.

Categories

Tech |