Categories
அரசியல் மாநில செய்திகள்

MK Stalin னை விளம்பரம் செய்ய… MGR யின் திட்டம் தேவைப்படுகிறது..! KP முனுசாமி கிண்டல்..!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் கே.பி முனுசாமி,  நான் கூட ஒரு பேட்டியில் நான் சொன்னேன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் கிராமப்புறங்களில் இருக்கின்ற குழந்தைகளுக்கு சத்துணவு கொடுத்து பள்ளிக்கு வர வேண்டும் என்று லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு உணவு அளித்தார். அப்போது அவருடைய தந்தை திரு மறைந்த முன்னாள் முதலமைச்சர் திரு.கருணாநிதி அவர்கள், புரட்சித் தலைவரைப் பார்த்து என்ன சொன்னார்கள் ?

என்றால், பிள்ளைகளை தட்டு எந்த  வைத்து விட்டார் எம்.ஜி.ஆர். என்று சொன்னார். அப்படி  சொன்னவரின் மகன்தான் இன்று  எங்களுடைய தலைவர் அவருடைய சிந்தனையிலே கொண்டு வந்த திட்டத்தை கொடுத்து அவரை விளம்பரப்படுத்தி கொள்கிறார். இதில் கூட நாங்கள் தான் அவர்களுக்கு உதவியாக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.ஆ.ராசா அவருடைய பேச்சு என்பது மற்றவர்களுடைய மனதை புண்படுத்துகின்ற வகையிலே இருப்பதோடு மட்டுமல்லாமல்,  மற்றவர்களுடைய உரிமையை அவர் பறிக்கின்ற வகையிலே பேசிக்கொண்டு இருக்கிறார். அது மிகவும் கண்டிக்கத்தக்கது.

திரு ராஜா அவர்களுடைய தலைவராக இருக்கக் கூடிய திரு .ஸ்டாலின் அவர்கள் கண்டிக்க வேண்டும். அப்படி அவர் கண்டிக்காத காரணத்தினால் தான் எங்களுடைய பொதுச்செயலாளர் கூட்டத்தில் கூட சொல்லும் போது, திரு.ராஜா சொன்ன கருத்துக்கள் திரு ஸ்டாலினுடைய குடும்பப் பெண்களுக்கும் சேருமா? என்ற ஒரு வினாவை எழுப்பி இருக்கிறார். இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் ஒரு வாய்ப்பை உருவாக்க ஸ்டாலின் அவர்கள் உதவியாக இருக்கிறார்கள். அதை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களுடைய கண்டிப்பான கருத்து என் தெரிவித்தார்.

Categories

Tech |