Categories
உலக செய்திகள்

கொரோனாவின் 3ம் அலை… பிரிட்டன் பாதுகாப்பாக இருக்கும்… ஆனால் இந்த நாடுகள் ஆபத்திலிருக்கிறது… எச்சரித்த MHRA தலைவர்…!!

கொரோனா வைரஸின் மூன்றாவது அலையிலிருந்து பிரிட்டன் பாதுகாப்பாக இருக்கும் என்றும் ஐரோப்பிய நாடுகள் ஆபத்தில் இருக்கிறது என்றும்  MHRA-ன் முன்னாள் தலைமை நிர்வாகி  கூறியுள்ளார்.

Medicines and Healthcare products Regulatory Agency – MHRA-ன் முன்னாள் தலைமை நிர்வாகி சர் கென்ட் உட்ஸ்  ,  ” ஆக்ஸ்போர்ட்  பல்கலைக்கழகம் அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்துடன் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிராக தயாரித்த தடுப்பூசியால் ரத்தம் உறைதல் போன்ற பக்க விளைவு ஏற்படுகிறது என்று எழுந்துள்ள ஆதாரமற்ற புகார்களால் ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற சில ஐரோப்பிய நாடுகள் மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதை தாமதப்படுத்தி வருகிறது. இது கொரோனா வைரசின் மூன்றாவது அலை பரவுவதற்கு  முக்கிய காரணமாக அமையலாம்.

2 முக்கிய காரணங்களால் கொரோனா வைரஸின் 3வது அலையை தடுக்க முடியாமல் போகலாம். முதல் காரணம் தடுப்பூசியை தடை செய்த நாடுகள் நேரத்தை இழந்துவிட்டது. இரண்டாவது காரணம் மக்களின் நம்பிக்கை. தற்போது மக்கள் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்காக தயாராக இருப்பார்களா? என்று அவர் கேள்வி கேட்டுள்ளார். மேலும் பிரிட்டனில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது என்று நான் நம்புகிறேன். எனவே பிரிட்டனால் கொரோனா வைரசின் மூன்றாவது அலையிருந்து மக்களை பாதுகாக்க முடியும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |