மொயின் அலி ,டு ப்ளசிஸ், அம்பத்தி ராயுடு ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால், 218 ரன்களை சிஎஸ்கே அணி குவித்துள்ளது.
14 வது ஐ.பி.எல் தொடரின் , 27 வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில், நடைபெற்று வருகிறது . இதில் டாஸ் வென்ற மும்பை அணி , பீல்டிங்கை தேர்வு செய்ததால் , சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்ட்வாட் – டு ப்ளசிஸ் களமிறங்கினர் .இதில் ருதுராஜ் 1 பவுண்டரி மட்டும் அடித்து ,4 ரன்னில் வெளியேறினார். அடுத்ததாக மொயின் அலி – டு ப்ளசிஸ் பாட்னர்ஷிப் அதிரடி காட்டியது .இதில் மொயின் அலி 5 பவுண்டரி ,5 சிக்ஸர் அடுத்து விளாசினார் .இதை தொடர்ந்து டு ப்ளசிஸ் 2 பவுண்டரி 4 சிக்ஸர் அடித்து விளாசினார் .
இதில் மொயின் அலி 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க .அடுத்ததாக டு ப்ளசிஸ் 50 ரன்கள் எடுத்து வெளியேறினார் .அடுத்ததாக களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 2 ரன்னில் ஆட்டமிழந்தார் . இறுதிவரை அட்டமிழக்காமல் அம்பத்தி ராயுடு – ஜடேஜா ஜோடி விளையாடியது .இதில் சிறப்பாக அம்பத்தி ராயுடு , அதிரடி ஆட்டத்தை காட்டினார் . இவர் 27 பந்துகளில் 4 பவுண்டரி , 7 சிக்ஸர்களை அடித்து விளாசினார் . இறுதியில் அம்பத்தி ராயுடு 72 ரன்களும் ,ஜடேஜா 22 ரன்கள் எடுக்க , 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி 4 விக்கெட் இழப்பிற்கு ,218 ரன்களை குவித்துள்ளது . அடுத்து களமிறங்கி உள்ள மும்பை அணி 219 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடி வருகிறது .