Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS RCB : மாஸ் காட்டிய விராட் கோலி, மேக்ஸ்வெல் …. மும்பைக்கு 166 ரன்கள் இலக்கு ….!!!

14-வது சீசன் ஐபிஎல் தொடரில் 39-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு  தேர்வு செய்தது.அதன்படி ஆர்சிபி அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது . இதில் தொடக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலி- தேவ்தத் படிக்கல் ஜோடி களமிறங்கினர். இதில் படிக்கல் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்க அடுத்ததாக  ஸ்ரீகர் பரத் , விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர் .

இதில் ஸ்ரீகர் பரத்  32 ரன்னில் ஆட்டமிழக்க,  விராட் கோலி 51  ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு 4-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த மேக்ஸ்வெல் –  டி வில்லியர்ஸ் ஜோடி மும்பை அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இதில் மேக்ஸ்வெல் 56 ரன்களும், டி வில்லியர்ஸ் 11 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர் .இறுதியாக ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது. மும்பை அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதையடுத்து களமிறங்கிய உள்ள மும்பை அணி 166 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு விளையாடி வருகிறது.

Categories

Tech |