ஐபில் தொடரில் நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 54 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது .
14-வது சீசன் ஐபிஎல் தொடரில்நேற்று நடந்த 39-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.அதன்படி ஆர்சிபி அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது . இதில் தொடக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலி- தேவ்தத் படிக்கல் ஜோடி களமிறங்கினர். இதில் படிக்கல் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்க அடுத்ததாக ஸ்ரீகர் பரத் , விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர் .
விராட் கோலி 51 ரன்னும், மேக்ஸ்வெல் 56 ரன்னும் , டி வில்லியர்ஸ் 11 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர் .இறுதியாக ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது. மும்பை அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் பிறகு 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது .இதில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா – டி காக் ஜோடி களமிறங்கி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர் .இதில் டி காக் 24 ரன்னில் வெளியேற கேப்டன் ரோகித் சர்மா 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன் பிறகு களமிறங்கிய வீரர்கள் ஆர்சிபி அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர் .இதில் 17-வது ஓவரை வீசிய ஹர்சல் பட்டேல் மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட், மற்றும் ராகுல் சஹார் ஆகியோரை வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றினார். இறுதியாக மும்பை அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது .இதனால் 54 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது. இதில் ஆர்சிபி அணி சார்பில் ஹர்சல் பட்டேல் 4 விக்கெட்டும், சஹால் 3 விக்கெட்டும் ,மேக்ஸ்வெல் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.