Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS SRH : மிடில் ஆர்டரில் தடுமாறிய மும்பை …! ஹைதராபாதிற்கு 151 ரன்களை …வெற்றி இலக்காக நிர்ணயித்த மும்பை…!!!

9 வது லீக் போட்டியில்,மும்பை இந்தியன்ஸ் – சன்ரைஸஸ் ஹைதராபாத்  இன்று மோதல் .

14வது  ஐ.பி.எல் தொடரின் 9 வது லீக் போட்டியில் , மும்பை இந்தியன்ஸ் – சன்ரைஸஸ் ஹைதராபாத்  அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி சென்னை எம் .ஏ சிதம்பரம்  மைதானத்தில் ,   தொடங்குகிறது . இந்நிலையில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ்  அணி  பேட்டிங்கை தேர்வு செய்தால் ,சன்ரைஸஸ் ஹைதராபாத் பவுலிங்கியில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா –குயின்டன் டெக்காக் ஜோடி களமிறங்கினர் . தொடக்கத்திலிருந்தே ரோஹித் சர்மா அதிரடி ஆட்டத்தை காட்டினார் .இவர் 2 சிக்சர் ,2 பவுண்டரிகளை அடித்து அசத்தினார் .பின் ரோஹித் சர்மா அடித்த பந்தை, விஜய் ஷங்கர் கேட்ச் பிடிக்க ,அவுட் ஆகி வெளியேறினார் . 

இதன்  பின் சூர்யகுமார் யாதவ் களமிறங்க ,6 பந்துகளில் ,10 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார் . 4  பவுண்டரிகளை அடித்து விளாசிய குயின்டன் டெக்காக், 39 பந்துகளில் ,40 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார் .அடுத்து  களமிறங்கிய இஷான் கிஷன் 12 ரன்களிலும் ,ஹர்திக் பாண்டிய 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் . ஆனால் கடைசி வரை ஆட்டமிழக்காமல் பொல்லார்ட் போராடினர் .இறுதியாக குர்னால் பாண்டியா 3 ரன்களை எடுக்க, பொல்லார்ட் 3 சிக்சர் ,1 பவுண்டரிகளை அடித்து ,35 ரன்கள் எடுத்தார் ,இறுதியாக மும்பை அணி  20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து ,150 ரன்களை குவித்தது .அடுத்து களமிறங்கிய ஹைதராபாத்  அணி 151 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடுகிறது .

Categories

Tech |