Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS SRH : மும்பை 6 ஓவரில் 1 விக்கெட் …!அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மா அவுட் …!!!

9 வது லீக் போட்டியில்,மும்பை இந்தியன்ஸ் – சன்ரைஸஸ் ஹைதராபாத்  இன்று மோதல் .

14வது  ஐ.பி.எல் தொடரின் 9 வது லீக் போட்டியில் , மும்பை இந்தியன்ஸ் – சன்ரைஸஸ் ஹைதராபாத்  அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி சென்னை எம் .ஏ சிதம்பரம்  மைதானத்தில் , இன்று இரவு 7.30மணிக்கு தொடங்குகிறது . இந்நிலையில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ்  அணி  பேட்டிங்கை   தேர்வு செய்துள்ளது.

தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா –குயின்டன் டெக்காக் ஜோடி களமிறங்கியது. தொடக்கத்திலிருந்தே ரோஹித் சர்மா அதிரடி ஆட்டத்தை காட்டினார் .இவர் 2 சிக்சர் ,2 பவுண்டரிகளை அடித்து அசத்தினார் .பின் ரோஹித் சர்மா அடித்த பந்தை விஜய் ஷங்கர் கேட்ச் பிடிக்க ,அவுட் ஆகி வெளியேறினார் . 6 ஓவர்களில் மும்பை அணி 1 விக்கெட் இழந்து 54 ரன்களை எடுத்துள்ளது .



		

Categories

Tech |