ரூ. 10,000 கோடியில் நுண் உணவு உற்பத்தி நிறுவனம் உருவாக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் சுயசார்பு திட்டத்தின் 3ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார். அதில், விவசாயத் துறை சார்ந்த 11 விதமான அறிவிப்புகள் இன்று இடம் பெற உள்ளன. குளிர்பதன கிடங்கு, விவசாயப் பொருட்களுக்கான போக்குவரத்து போன்றவை இன்றைய அறிவிப்பில் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசி வரும் நிதியமைச்சர் கூறியதாவது,” நுண் உற்பத்தி நிறுவனம் மூலம் உள்ளூர் உணவு பொருட்கள் சர்வதேச அளவில் சந்தைப்படுத்தப்படும் என கூறியுள்ளார். இந்த ரூ.10,000 கோடி நிதி மூலம் சுமார் 2 லட்சம் சிறிய உணவு உற்பத்தி நிறுவனங்கள் பலமடையும் என தெரிவித்துள்ளார். ரூ.10,000 கோடியில் உருவாகும் இந்த நுண் உற்பத்தி நிறுவனம் மூலம் தமிழகத்தின் மரவள்ளி கிழங்கு சர்வதேச அளவில் சந்தைப்படுத்தப்படும். அதேபோல உத்தரபிரதேச மாம்பழம், காஷ்மீரின் குங்குமப்பூ, ஆந்திராவின் மிளகாயும் சர்வதேச அளவில் சந்தைப்படுத்தப்படும்” என கூறியுள்ளார். இதனால், மகளிர் சுய உதவிக்குழுக்கள், வேளாண்பொருட்கள் உற்பத்தியாளர்களும் நுண் உற்பத்தி நிறுவனம் மூலம் பயனடைவர் என கூறியுள்ளார்.