மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பெண்களுடன் தவறான பழக்கம் வைத்திருந்ததாக சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
அமெரிக்காவின் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனரான பில்கேட்ஸ், 13 வயது சிறுவனாக இருந்தபோதே மென்பொருள் குறித்து அதிக திறமையை வளர்த்துள்ளார். அதன் பின்பு 20-வது வயதில் தன் நண்பர் பால் ஆலன் என்பவருடன் சேர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார்.
தற்போது மிகபிரபலமடைந்த, இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த மதிப்பு சுமார் 93 பில்லியன் பவுண்டுகள் ஆகும். இந்நிலையில் பில் கேட்ஸ் தொடர்பில் சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதாவது அவர் தன் இளமை காலங்களில் நிர்வாண விடுதிகளில் தான் அதிகமாக பொழுதை கழிப்பாராம்.
அவர் பெண்களுடன் அதிக நெருக்கம் காட்டுவார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அவரது இந்த பழக்கமானது அவரின் மனைவி மெலிண்டாவிற்கு தெரியுமாம். மேலும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் சிலருடன் தவறான பழக்கம் வைத்திருந்ததாக, நிர்வாக அமைப்பினர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
எனவேதான் அவர் நிர்வாக அமைப்பிலிருந்து பதவி விலகியதாக கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் தொழிலதிபர் எப்ஸ்டின் என்பவர் சிறுவர்களிடம் தவறாக நடந்துகொண்டது தொடர்பில் அமெரிக்க சிறையில் இருந்தார். அவருடன் பில்கேட்ஸ் நட்பாக பழகியதாகவும் மனைவியை விவகாரத்து செய்வது குறித்து கலந்து ஆலோசித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதனாலேயே மெலிண்டா அவரை விவாகரத்து செய்ததாக கூறப்பட்டுள்ளது