Categories
உலக செய்திகள்

விண்டோஸ் 10 ஐ முடிவுக்கு கொண்டு வர திட்டம்.. மேம்பட்ட திறன்களுடன் புதிய பதிப்பு..!!

மைக்ரோசாப்ட் நிறுவனமானது வரும் 2025 ஆம் வருடத்தில் அக்டோபர் மாதம் Windows 10 இயங்குதளத்தை முடித்து, புதிய பதிப்பை வெளியிட தீர்மானித்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனமானது விண்டோஸ் 10 இயங்குதளத்தை கடந்த 2015 ஆம் வருடத்தில் ஜூலை மாதம் 29 ஆம் தேதி அன்று வெளியிட்டது. தற்போது அதன் செயல்பாடுகளை முடிவுகொண்டு வந்து, அதற்கு பதிலாக மேம்பட்ட திறனுடன் எளிதில் பயன்படுத்தும் வகையான அம்சங்களுடன் புதிய பதிப்பு வெளியிடப்பட இருக்கிறது.

இம்மாதம் 24ஆம் தேதியன்று புதிய பதிப்பை வெளியிடும் நிகழ்வு இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சத்ய நாதெல்லா கூறுகையில், எளிதில் ஈர்க்கும் வகையில் எங்களின் புது பதிப்பு இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |