Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை எதிர்க்க தயங்கும் மத்திய கிழக்கு நாடுகள்… காரணம் என்ன…?

மத்திய கிழக்கு நாடுகள் ரஷ்ய நாட்டிற்கு எதிராக பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதை தவிர்ப்பதாக கூறப்படுகிறது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 19-ஆம் நாளாக போர் தொடுத்து வருகிறது. இத்தாக்குதலை எதிர்த்து அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த நாடுகளும் ரஷ்ய நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. எனினும், எகிப்து, துருக்கி, சவுதி அரேபியா, ஈரான், சிரியா, எகிப்து, இஸ்ரேல் மற்றும் கத்தார் உட்பட மத்திய கிழக்கு நாடுகள் ரஷ்ய நாட்டின் மீது நடவடிக்கை மேற்கொள்வதை தவிர்க்கின்றன.

இந்நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டால், ரஷ்ய நாட்டுடனான தங்களின் உறவு பாதிக்கப்படும் என்று அஞ்சுவதாக கூறப்படுகிறது. எனவே, ரஷ்ய நாட்டின் மீது பொருளாதார தடைகள் உட்பட எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் இருக்கின்றன. அதற்கு பதிலாக, மிகுந்த எச்சரிக்கையுடன் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Categories

Tech |