Categories
மாநில செய்திகள்

பொங்கல் கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்கள் ஈடுபடக்கூடாது…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்படும் என்ற தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்பதனிருப்பு பகுதியில் உள்ள விவசாயிகளிடம் பொங்கல் பரிசு தொகுப்புக்காக கரும்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த செங்கரும்புகளை கூட்டுறவுத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

அதன் பிறகு நவீன மயமாக்கப்பட்ட ரேஷன் கடைகள் மற்றும் சீர்காழி நகர கூட்டுறவு வங்கிகளிலும் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக்கு பிறகு ஜெ. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அவர் பேசியதாவது, பொங்கல் பண்டிகையின் போது வழங்கப்படும் கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்கள் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொங்கல் பண்டிகையின் போது வழங்கப்படும் கரும்பு கொள்முதலை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Categories

Tech |