Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மிதி வண்டியால் வந்த தகராறு… நண்பரின் கொடூர செயல்… சென்னையில் பரபரப்பு…!!

கூலித்தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர் காந்திநகர் பகுதியின் சாலையோரம் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு ஆட்டோ ஓட்டுனரான ராஜா என்ற நண்பர் உள்ளார்.  இவர்கள் இருவருமே ஒன்றாக காந்திநகர் சாலையோரம் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து மிதிவண்டி ஒன்றை திருடியுள்ளனர். அதன் பிறகு இருவரும் சேர்ந்து அந்த மிதிவண்டியை விற்று அதிலிருந்து கிடைத்த பணத்தில் மது அருந்தியுள்ளனர். இதனையடுத்து இருவரும் போதையில் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் மிதிவண்டி விற்றதை குறித்து பேசும்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் மிகவும் கோபமடைந்த ராஜா கணேசனை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பயங்கரமாக குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே கணேசன் பரிதாபமாக  உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேசனின் உடலை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய ராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |