மிதுனம் ராசி அன்பர்களே..!!இன்று நன்மைகள் நடைபெறும் நாள் ஆக இருக்கும். நாடாளும் நபர்களின் நட்பு கிட்டும். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் விலகி முன்னேற்றம் ஏற்படும்.
இன்று எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும், லாபம் உயரும், பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏற்படும். வேலைப்பளு குறையும். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். விருந்தினர் வருகையால் செலவு கொஞ்சம் கூடும். மனதில் புதிய தெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாராத உதவியால் நன்மையும் ஏற்படும்.
இன்று மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமும் விளையாட்டுத் துறையில் ஆர்வம் மிகுந்து காணப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருக பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியமுமே சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நீலம்