பெங்களூரு, கலபுரகி என்ற பகுதியில் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்த இளம் பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு, கலபுரகி பகுதியை சேர்ந்த 24 வயது இளம் பெண் கொரோனா பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் அப்பெண் தூங்கிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த வாலிபர் ஒருவர் இளம்பெண்ணின் துணிகளை விலக்கி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண் திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் அருகே வாலிபர் நிற்பதையும், தனது ஆடைகளை களைந்து இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டு கூச்சலிட்டார்.
தூங்கிக் கொண்டிருந்த சக ஊழியர்கள் எழுந்தனர். பின்னர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். நோயாளியும் காவலாளியும் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் குறித்து விசாரணை செய்ததில் அவரது பெயர் பிண்டு என்பது தெரியவந்தது. தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை செய்வதும், அரசு ஆஸ்பத்திரிக்கு நோயாளிகளை அழைத்து வரும் வேலையைச் செய்து வருகிறார். நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் மருத்துவமனைக்குள் நுழைந்து இளம்பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.