எம்எல்ஏ-க்கள் விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீடிரென அதிரடி சோதனையில் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏக்கள் தங்கும் விடுதியில் நேற்றிரவு, 10 மணியளவில், எம்எல்ஏக்கள் விடுதியில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்ததை அடுத்து, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள், திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் விடுதிகளில் உள்ள சி-பிளாக் பகுதியில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் குறிப்பாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் அறையிலும் நடைபெற்றது.சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற இந்த அதிரடி சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணம் ,பணம் பற்றி எந்த தகவல்களையும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. MLA விடுதியில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.