Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மிகவும் மோசமா இருக்கு…. நடைபெற்ற போராட்டம்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

ரேஷனில் விநியோகம் செய்யும் அரிசி தரமின்றி இருப்பதால் பொதுமக்களுடன் சேர்ந்து எம்.எல்.ஏ. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சில ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி தரமற்ற நிலையில் இருப்பதாக புகார்கள் வந்தது. இதகுறித்து மாவட்ட கலெக்டரிடம், பா.ஜனதா எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி மனு ஒன்றை கொடுத்திருந்தார். இந்நிலையில் தம்மத்துகோணம் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் கொடுக்கப்பட்ட அரிசி மிக மோசமாக இருப்பதனால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த எம்.ஆர். காந்தி மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மக்களுடன் இணைந்து ரேஷன் கடையை முற்றுகையிட்டனர். இதனையடுத்து அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அப்போது எம்.ஆர்.காந்தி கூறியபோது இங்கு கொடுக்கப்படும் அரிசி தரமின்றி இருப்பதாகவும், தற்போது இருப்பில் உள்ள 20 அரிசி மூட்டைகள் மிக மோசமாகவும்  இருக்கின்றது. எனவே இதை மாற்றி நல்ல அரிசி வழங்க வேண்டும் என்று எம்.எல்.ஏ. அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். அதன்பின் அதிகாரிகள் முன்னிலையில் கோணம் அரசு குடோனில் இருந்து லாரியின் மூலம் புதிதாக அரிசி மூடைகள் கொண்டுவரப்பட்டது. அதனை எம்.எல்.ஏ., பொதுமக்கள் ஆகியோர் ஆய்வு செய்த பின் ரேஷன் கடைக்கு செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து மக்களுக்கு புதிதாக வந்த ரேஷன் அரிசி வழங்கப்பட்டது. இவ்வாறு மோசமாக இருந்த அந்த 20 அரிசி மூட்டைகளை அதிகாரி லாரியில் எடுத்து சென்றுள்ளனர்.

Categories

Tech |