மாஸ்டர் படத்தில் நீக்கப்பட்ட காட்சி குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘மிகவும் கஷ்டப்பட்டு எடுத்த முடிவு’ என்று கூறியுள்ளார் .
தமிழ் திரையுலகில் மாநாடு , கைதி ஆகிய ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் . சமீபத்தில் இவர் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘மாஸ்டர் ‘. கடந்த சில நாட்களுக்கு முன் இந்தப் படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சுவாரசியமான பரபரப்பை ஏற்படுத்தியது . இந்நிலையில் மாஸ்டர் படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘ ‘படத்தின் ப்ளோ பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக சில காட்சிகளை நீக்க முடிவு செய்தோம் .
இதற்கு முக்கிய காரணம் படத்தின் நீளம் . மேலும் விஜய் சார் இந்த மாதிரி பேச ஆரம்பிப்பது செகண்ட் ஆஃபில் இருந்துதான். அப்போது கதாபாத்திரம் முழுமையாக மாறிய பின் இந்த காட்சிகள் வைத்தால் நேர்கோடாகிவிடும் . இப்படி அந்த காட்சி படத்தில் இடம் பெறாமல் போனதற்கு அதிக காரணங்கள் இருக்கிறது . இது பல முறை யோசித்து யோசித்து மிகவும் கஷ்டப்பட்டு எடுத்த முடிவு ‘ என்று கூறியுள்ளார் .