கிரீஸில், அகதிகளை ஏற்றி சென்ற படகு கடலில் கவிழ்ந்ததில்,ஒருவர் பலியாகியுள்ளார்.
ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக் மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாட்டு மக்கள் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்திற்காக தங்கள் நாடுகளை விட்டு வெளியேறி உயிரை பணயம் வைத்து கடலில் பயணித்து ஐரோப்பிய நாடுகளுக்குள் அகதிகளாக சட்டவிரோதமாக நுழைகிறார்கள்.
அப்போது, உயிர் பலிகளும் ஏற்படுகிறது. இந்நிலையில் மத்திய தரைக்கடல் வழியே துருக்கியில் இருந்து சுமார் 30க்கும் அதிகமான அகதிகள் படகில் பயணித்து கிரீஸ் நாட்டிற்குள் நுழைய முயற்சித்துள்ளனர். அப்போது, கிரீஸின் ஃப்லிகிராண்ட்ரோஸ் என்ற தீவு கூட்டத்திற்கு அருகில் சண்டரோனி என்ற தீவில் சென்ற படகு, திடீரென்று கடலில் கவிழ்ந்தது. அதிலிருந்த அனைவரும் நீரில் மூழ்கினார்கள்.
அதனையடுத்து, கிரீஸ் நாட்டின் கடற்படையினர் உடனடியாக அங்கு சென்று மீட்பு பணியை மேற்கொண்டனர். சுமார் 12 நபர்களை பாதுகாப்பு படையினர் மீட்டிருக்கிறார்கள். மேலும், ஒரு நபர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமிருந்த 30 நபர்கள் மாயமானதாகவும், அவர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.