Categories
தேசிய செய்திகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.50,000 கோடியில் வேலை வாய்ப்பு திட்டம்…!!

சொந்த ஊர் திரும்பிய புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க ரூ.50,000 கோடியில் வலை வாய்ப்பு திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாரான் துவக்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஊரடக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி வழங்கப்பட்டு வருவதாக கூறினார். சுமார் 116 மாவட்டங்களுக்கு அதிகஅளவில் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் தங்கள் பணியிடங்களில் இருந்து திரும்பியுள்ளனர். ஊர் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களின் திறன்களை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்க 25 வகையான பணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறினார். விவசாயம், அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் புலம் பெயர் தொழிலாளர்களை உள்ளூர்களிலேயே பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Categories

Tech |