கனடா அரசு தங்கள் குடிமக்களின் குடும்பத்தினர் என்ற அடிப்படையில் சுமார் ஒரு லட்சம் நபர்களை ஒவ்வொரு வருடமும் நாட்டிற்குள் வரவேற்கிறது.
கனடாவின் அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, கணவன், மனைவி, குழந்தைகள், தாத்தா, பாட்டி போன்ற குடும்பத்தினர் மட்டுமில்லாமல் சில முக்கிய சூழ்நிலைகளில், உறவினர்களையும் கனடா, தங்கள் நாட்டில் புலம் பெயர அனுமதியளிக்கிறது.
கனடாவில் வாழும் குடிமக்கள், நிரந்தர வாழிட உரிமையுடையவர்கள் போன்றவர்களில், 18 வயதுக்கு அதிகமானவர்கள் தங்கள் குடும்பத்தினர் குடியுரிமை பெறுவதற்கு ஸ்பான்சர் செய்ய முடியும்.
எனினும், இதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, கனடா நாட்டு குடிமக்களுக்கு ரத்த சம்பந்தம் உடையவர்கள், அவர்களால் தத்தெடுக்கப்பட்டவர்கள், பெற்றோரை இழந்தவர்கள், 18 வயதிற்குட்பட்டவர்கள் போன்றோர் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். ஆனால், அவர்கள் திருமணமானவர்களாக இருக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.