அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்த புலம்பெயர்ந்தோர் மெக்சிகோ அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஹைதி, டொமினிக், பங்களாதேஷ், கௌதமாலா, ஹோண்டுரஸ் மற்றும் எல் சால்வடார் ஆகிய நாடுகளிலிருந்து இரண்டு கண்டெய்னர் லாரிகளில் புலம் பெயர்ந்த மக்கள் நூற்றுக்கணக்கானோர் மெக்ஸிகோவின் எல்லை வழியே அமெரிக்க நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்துள்ளனர். அப்போது, அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டனர். அந்த லாரிகள் சுகாதாரமில்லாமல் இருந்துள்ளது.
அதனுள், குழந்தைகள் உட்பட பெண்கள் மற்றும் கர்ப்பிணிகள் அதிகமானோர் முகக்கவசமின்றி நெருக்கமாக அமர்ந்திருந்துள்ளனர். அதில் பல நபர்களுக்கு காய்ச்சல் இருந்துள்ளது. அவர்கள் தொடர்பான தகவல்களை பதிவு செய்த அதிகாரிகள், அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.