1856 வது வருடம் பிறந்த MIHAILLO TOLOTOS என்பவர் தான் இறக்கும் வரை பெண்களை பார்க்காதவர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆம். இவர் பிறந்த நான்கு மணிநேரத்தில் இவருடைய தாயார் இறந்துவிட்டார். இவருடைய தாயார் இறந்த பின்பு வேறு யாரும் இல்லாத காரணத்தினால் mount Athos என்கிற மலைப்பகுதியில் வாழும் துறவிகள் இவரை தத்தெடுத்து வளர்த்தார்கள். அதனால் இவரும் ஒரு துறவியாகவே வளர்ந்துள்ளார். ஆனால் அதில் ஒரு சுவாரஸ்சியமான சம்பவம் என்னவென்றால் இவர் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை பெண்களையே பார்த்ததில்லையாம். இது எப்படி சாத்தியம் என்று கேட்டால் இவர் வளரும் மலைப்பகுதியில் ஆயிரம் வருடத்திற்கு முன்னரே ஒரு சட்டத்தை கொண்டு வந்தார்களாம்.
அந்த சட்டத்தின்படி இந்த மலை பகுதியில் இருந்து 500 மீட்டர் தூரம் வரை எந்த ஒரு பெண்களோ அல்லது மிருகங்களோ உள்ளே வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. என்னதான் இங்கே தடை விதிக்கப்படிருந்தலும் இவர் ஒரு முறை கூட அந்த மலைப்பகுதியில் இருந்து கீழே இறங்கியது கிடையாதாம். குறிப்பாக கடைசி வரைக்கும் அதாவது தன்னுடைய 82வது வயது வரைக்கும் இவர் அந்த மலை பகுதியிலேயே வாழ்ந்து அங்கேயே இருந்துள்ளார். அவர் இறந்த பின்பு அங்கிருக்கும் மற்ற துறவிகள் அனைவரும் ஒன்றுகூடி MIHAILLO TOLOTOS மட்டும்தான் இந்த உலகத்திலேயே பெண்களை பார்க்காத ஒரே ஒரு ஆண்மகன் என்று முறைப்படி அறிவித்தார்கள்.