தனது மூன்வாக் ஸ்டைலின் மூலமாக பல கோடி பாப் இசைப் பிரியர்களின் மனதில் ராஜ நடை போட்டவர் மைக்கேல் ஜாக்சன். சிறுவயதிலிருந்தே பாப் இசைப் பாடல்களைப் பாடத் துவங்கிய மைக்கில் ஜாக்சன் அவரது பருவ வயதில் பாப் இசை உலகில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர். 1980 முதல் 90 வரை இவரை மிஞ்ச ஆளே இல்லாமல் பாப் இசை உலகின் மன்னனாக திகழ்ந்தவர் மைக்கேல் ஜாக்சன். இதன் காரணமாக இவர் கிங் ஆப் பாப் என்று உலக மக்களால் அழைக்கப்பட்டார். இவ்வளவு அருமை பெருமைகள் சொந்தக்காரரான மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை அவ்வளவு இனிமையாக அமைந்து விடவில்லை. அவரது பாடல்களின் மூலம் மகிழ்ந்தவர்கள் அளவு கூட அவரது வாழ்க்கையில் இனிமை போங்கவில்லை என்பது தான் கசப்பான உண்மை.
இவரது தந்தையை சிறுவயது முதலே இவருக்குப் பிடிக்காது. மற்றும் இவர் மிகவும் விரும்பிய அவரது காதலி மரணம் அடைந்துவிட்டார். 1990களில் இவரது மேல் சுமத்தப்பட்ட வன்கொடுமை வழக்கு, முகமாற்று அறுவை சிகிச்சைகள் பல தடவை செய்ததினால் இவருக்கு ஏற்பட்ட சரும பிரச்சனைகள் நோய் போன்றவற்றினால் இவர் வெளிவருவதே அரிதாகிப் போனது. இன்று வரை பாப் இசை ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படும் இவரது பாடல்கள் பல உலக சாதனைகளைப் படைத்திருக்கிறது. இவரது சாதனைகளும் வேதனைகளும் பற்றி அறிந்த உங்களுக்கு இவரது வினோதமான சில குணாதிசயங்கள் பற்றி தெரியுமா? ஜாக்சனுக்கு ஸ்பைடர் மேனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது மட்டுமல்ல இன்னும் நிறைய ஆசை இருந்தது.
- தன்னை போலவே உருவம் கொண்ட ரோபோ ஒன்றை வடிவமைத்துக் கொள்ள விரும்பினார் மைக்கேல் ஜாக்சன்.
- உலகின் முதன்மை காமிக்ஸ் புத்தக நிறுவனமான மார்வெலை வாங்கிட நினைத்தார் ஜாக்சன். ஏனெனில் அவருக்கு அதில் வரும் ஸ்பைடர் மேனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை.
- மைக்கேல் ஜாக்சன் இறந்த பிறகு அவரது ரகசிய பை ஒன்றில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் அவர் பதிவு செய்து வைத்திருந்தது தெரியவந்தது. அவையாவும் வெளியீடாத பாடல்கள். அவற்றை எப்போது வெளியிடுவார்கள் என அவரது ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.
- உலக வர்த்தக மையத்தில் ஏற்பட்ட விமான தாக்குதல் அன்று மைக்கில் ஜாக்சன் ஒரு மீட்டிங்கில் பங்குபெற இருந்தது. அவர் அன்று செல்வதற்கு தாமதமானதால் உயிர் தப்பினார்.
- ஒரு ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தினால் ஏலம் விடப்பட்ட மைக்கேல் ஜாக்சனின் உள்ளாடை ஒரு மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டுள்ளது.
- மைக்கில் ஜாக்சன் பலமுறை முகமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதினால் அவரது முகத்தின் சருமத்தில் பல பிரச்சனைகள் ஏற்பட்டன. அவரது இதழும் புருவங்களும் உண்மையானது அல்ல டேட்டோ குத்தியது என்று அவரது மருத்துவர் அவர் இறந்தபின் கூறியுள்ளார்.
- மைக்கேல் ஜாக்சனுக்கு வெண்குஷ்டம் நோய் இருந்ததாகவும் அதை மறைப்பதற்காக தனது முகம், மார்பு, கைகளில் மிக கடினமான மேக்கப் போட்டுக் கொள்வார் என்றும் அவரது மருத்துவர் கூறியுள்ளார்.
- மைக்கில் ஜாக்சன் அவரது நண்பர் ஒருவருடன் பாடிய ஒரு பாடல் 30 வருடங்கள் கழித்து வெளியானது.
- பாப் உலகில் மட்டுமல்ல கொடை வழங்குவதிலும் மன்னனாகத் திகழ்ந்தார். கின்னஸ் சாதனை புத்தகத்தில் நிறைய அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்கிய ஆதரவு அளித்தவர் என்ற சாதனையாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- மைக்கில் ஜாக்சன் அசைவம் சாப்பிடமாட்டார். சைவம் தான். இவரைப் பின்தொடர்ந்து இவரது பல லட்சம் ரசிகர்களும் சைவமாக மாறி இருக்கின்றனர்.
- இன்று இறந்தும் பல கோடிக்கணக்கான மக்களின் நெஞ்சில் வாழும் அற்புத கலைஞன்.