மில் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சிவகிரி பகுதியில் மைதிலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் காங்கேயத்தில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பங்குச்சந்தை வர்த்தகத்தில் ரூ.2 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். அதில் பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விக்னேஸ்வரன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விக்னேஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை பார்த்த மைதிலி அதிர்ச்சியடைந்து அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் விக்னேஸ்வரனை உடனடியாக மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு விக்னேஸ்வரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காங்கேயம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.