மிளகின் மகத்துவம் பற்றிய தொகுப்பு….
பத்து மிளகு கையில் இருந்தால் பகைவன் வீட்டில் கூட சாப்பிடலாம் என்று சொல்வார்கள், விஷத்தை முறித்து உயிரை காப்பாற்றும் தன்மை இந்த மிளகுக்கு உள்ளது.
அதுமட்டுமில்லாமல் நாம் சாப்பிடும் சாப்பாட்டில் நல்ல வாசனையும் சுவையையும் கூட்டி தருகிறது இந்த மிளகு.
இந்த மிளகை தினம் ஒரு 5 எடுத்து சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
பலன்கள் :
1.செரிமானத்தை சீர் செய்து குடலை பலப்படுத்தும்.
2.வாயுத்தொல்லை அஜீரண கோளாறு ஏற்படாமல் தடுக்கும்.
3.தேவை அற்ற கொழுப்பை கரைக்கும்.
4.வயிற்றை சுற்றி உள்ள சதையை குறைக்கும்.
5.ரத்த ஓட்டம் உடலில் சீராக இருக்கும்.
6.நெஞ்சுசளியை போக்கும்.
7.நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல் திறனை அதிகரிக்கும்.
8.ஆஸ்துமா பிரச்சனை குறையும்.
9. 5 மிளகுடன் தேன் அல்லது பானக்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் இருமல் உடனே நிற்கும்.
எனவே மிளகின் மகத்துவத்தை உணர்ந்து உபயோகப்படுத்துங்கள்.