மிளகுரசம்
தேவையான பொருட்கள் :
புளித்தண்ணீர் – 1 கப்
மிளகு – 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு, சீரகம் – தலா 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
முதலில் மிளகு, காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை அரைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் புளித்தண்ணீர் , மஞ்சள்தூள் , அரைத்த விழுது, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும் . பின் எண்ணெயில் கடுகு ,கறிவேப்பிலை சேர்த்து , இதில் ரசக்கலவையை ஊற்றி நுரை வரும் போது இறக்கினால் சுவையான மிளகுரசம் தயார் !!!