Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

கோவையில் தீவிரவாதிகள் ”வாகன எண் வெளியீடு” போலீஸ் அதிரடி…!!

கோவையில் பதுங்கி இருக்கும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பயன்படுத்திய காரின் பதிவு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு இலங்கை வழியாக ஊடுருவிய லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பினர் 6 பேர் கோவையில் பதுங்கி இருப்பதாகவும் , விநாயகர் சதுர்த்திக்கு தாக்குதல் நடத்த இருப்பதாகவும் மத்திய உளவுதுறை தமிழகத்துக்கு எச்சரிக்கை விடுத்தது. அந்த எச்சரிக்கையில் 6 பேரில் 5  இலங்கையை சேர்ந்தவர் என்றும் , ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்பட்டு இருந்தது.மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து தமிழகம் முழுவதும் போலீஸ் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

Image result for lashkar-e-taiba

கோவையில் மட்டும் 200 போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பேருந்து நிலையில் , இரயில் நிலையம் என பயணிகளை முழு பரிசோதனை செய்தனர். நகரில் உள்ள CCTV கேமராக்களையும் ஆய்வு செய்து வந்தனர். இதையடுத்து கோவை போலீஸார் பயங்கரவாதிகள் என சந்தேகித்து 3 பேரின் புகைப்படத்தையும் , பயங்கவாதிகள் பயன்படுத்தியதாக அதில் ஷிப்ட் ,சைலோ , இன்னோவா என்ற மூன்று வாகனத்தின் பதிவு எண்களை வெளியீட்டு தொடர்ந்து போலீசார் பயங்கரவாதிகளை நெருங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |