ராணுவ உயர் அதிகாரியாக பணிபுரிந்தவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தின் எல்லையில் ராணுவ அதிகாரி ஒருவர் திடீரென தற்கொலை செய்துவிட்டார். இவர் தங்டார் செக்டாரில் ராணுவ உயர் அதிகாரியாகப் பணிபுரிந்தவர். இவ்வாறு ராணுவ உயர் அதிகாரியாகப் பணிபுரிந்தவர் திடீரென ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது குறித்த தகவல் யாருக்கும் தெரியவில்லை.
மேலும் சம்பவம் பற்றி ராணுவத் தரப்பில் கூறும்போது, ராணுவ உயர் அதிகாரி இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளனர்.