Categories
அரசியல்

தமிழகத்தில் காலை முதல் இரவு வரை ஆவின் பால் தட்டுபாடின்றி கிடைக்கும் – ஆவின் நிர்வாகம் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் காலை முதல் இரவு வரை ஆவின் பால் தட்டுபாடின்றி கிடைக்கும் என்பதால் பொது மக்கள் அச்சப்பட வேண்டிய தேவை இல்லை என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆவின் பாலகங்களுக்கு சென்று பொதுமக்கள் நேரடியாக தேவையான பாலை வாங்கிக்கொள்ளலாம். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பால் தங்கு தடையின்றி கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழகம் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே தனியார் பால் விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நாளை முதல் பால் முகவர்களின் கடைகளில் மட்டும் அதிகாலை 3.30 மணி முதல் காலை 9 மணி வரை மட்டுமே பால் விற்பனை செய்யப்படும் என அறிவித்த நிலையில் ஆவின் நிறுவனம் இத்தகைய முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |