பால் ஆறினால் மேலே ஏடு படியும் , அதனால் லேசாக தண்ணீர் தெளித்து வைத்தால் ஏடு படியாது.
பாலை காய்ச்சுவதற்கு முன் அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பிறகு காய்ச்சினால் பால் பாத்திரத்தில் அடி பிடிப்பதை தவிர்க்கலாம்.
பால் புளிக்காமல் இருப்பதற்கு ஏலக்காயை பால் காய்ச்சும் போதே அதனுடன் சேர்க்கவும் அவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும்.
பால் பொங்கி வரும்போது அதனை தவிர்க்க சிறிது தண்ணீர் தெளித்து விடலாம்.
தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் தயிர் புளிக்காமல் இருக்கும்.
மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றிவைத்தால் புளிக்காமல் இருக்கும் தயிர் குளிர்ச்சி அடையும் சுவையாகவும் இருக்கும்.
தயிர் புளிக்காமல் இருக்க ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் புளிக்காது.