அடுத்த பத்து வருடங்களில் இயற்கை பேரழிவுகள், வறட்சியினால் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய மில்லியன் கணக்கான உயிரினங்கள் அழியும் நிலை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உழைப்பிற்காக பயன்படுத்தப்படும் ஒட்டகம், கழுதை ,குதிரை, எருது மற்றும் யானை போன்ற 200 மில்லியன் உயிரினங்கள் ஒட்டுமொத்தமாக அழியக்கூடிய நிலை ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த விலங்குகளை வைத்து தான் உலகம் முழுக்க வாழும் 600 மில்லியன் மக்கள் அன்றாட வாழ்க்கைக்கான வருமானத்தை பெற்று வருகிறார்கள்.
ஆனால், காட்டுத்தீ, புயல் மற்றும் பெருவெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகளால் உழைக்கக்கூடிய விலங்குகள் பாதிப்படையும். இதனால் அவற்றை மட்டுமே நம்பியுள்ள மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கும். கடந்த வருடத்தில் மட்டும் இயற்கை பேரிடரால் இந்தியாவில் 17,000 விலங்குகள் உயிரிழந்துள்ளது.
பெருவெள்ளத்தினால், வருடத்திற்கு ஒரு மில்லியன் விலங்குகள் பலியாவதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் வருடத்திலும், ஆப்பிரிக்காவில் வறட்சி ஏற்பட்டதில், சோமாலிய நாட்டில் 80% விலங்குகள் உயிரிழந்தது.
இதுபோன்ற நிலை, வருங்காலத்தில் உண்டாகாமல் இருப்பதற்கு சர்வதேச நாடுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. காலநிலை மாற்றம், வரட்சி காரணமாக விலங்குகள் அதிகமாக பாதிப்படைகிறது. கடைசியாக உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.