Categories
அரசியல் மாநில செய்திகள்

லட்சக்கணக்கானவர்கள் என்னை தளபதியாக வச்சு இருக்காங்க : டிடிவி தினகரன் அதிரடி பேட்டி!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எங்க கட்சிகள் வந்து பலப்படுத்தி,  ஸ்ட்ராங்கா இருந்தா தான் நாம நாளைக்கு தேர்தலை சந்திக்கிறது  சரியா இருக்கும். 40 தொகுதிகளிலும் எங்க கட்சியை நாங்க பலப்படுத்தும் பணியில் இறங்கி இருக்கின்றோம். நிர்வாகிகள் என் மேல ரொம்ப நம்பிக்கை உடையவர்கள்.

தொண்டர்களும் சரியான முடிவை தலைமை கழக  நிர்வாகிகள் எடுப்பார்கள் என  தெரியும். தேர்தல் நேரத்தில் முடிவு பண்ணிக்கலாம். சில பேர் கேட்கறாங்க…  டிடிவி தினகரன் அதிமுக கட்சியை  கைப்பற்றுவேன் என சொன்னாரே, இப்போது கூட்டணி போடுவதற்கு சொல்றாருன்னு… அதாவது எங்கள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதே….

அம்மாவுடைய கட்சி இன்றைக்கு தவறானவர்கள் கையில் இருக்கிறது. அதனால்தான்  இந்த கட்சி ஆரம்பித்த போது, மதுரை மேலூரில் நான் சொன்னதே அதிமுக பிஎஸ் வீரப்பா கையிலும், எம்.என் நம்பியார் கையிலும் புரட்சித்தலைவரின் சின்னமும், கட்சியும்  இருக்கு.

அதை மீட்டெடுப்பதற்கான லட்சக்கணக்கான தொண்டர்கள் என்னை அவர்களது தளபதியாக நியமித்து, பொதுச் செயலாளராக கட்சியை  நியமித்து,  செயல்பட வைத்து இருக்கிறார்கள். எங்கள் இலக்கை அடையும் வரை நாங்கள் போராடுவோம் என தான் சொல்லி இருக்கின்றேன் என தெரிவித்தார்.

Categories

Tech |