டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறி தீ கொழுந்துவிட்டு எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பின்புறம் புதுபள்ளி அருகில் அங்கு உள்ள டிரான்ஸ்பார்மரில் திடீரென தீப்பொறி ஏற்பட்டது. இதனை கண்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தீப்பிடித்து விடுமோ என்ற பயத்தில் அலறி அடித்துக்கொண்டு வீட்டின் மின் இணைப்பை துண்டித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். மேலும் மின் இணைப்பை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். எனவே சற்று தாமதமாக வந்தாலும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள வீடுகளுக்கும் தீ பரவி பெரிய விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதற்குள் பொதுமக்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்து தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.