மீன் குஞ்சு வளர்ப்பு குளம் அமைக்க மானியம் வழங்கபடுவதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் 2021-2022-ன் கீழாக மீன் குஞ்சு உற்பத்தி அதிகரிக்க அதற்கான வளர்ப்புக் குளம் அமைக்க மானியம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற மீன் வளர்ப்பில் ஆர்வம் இருக்கும் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
இதில் ஒரு ஹெக்டரில் 6 லட்சம் ரூபாய் செலவு செய்து மீன் குஞ்சு வளர்ப்புக் குளம் அமைத்திட 5 சதவீதம் மானியமாக 3 லட்சம் ரூபாய் மற்றும் ஒரு ஹெக்டேர் நீர்பரப்பில் மீன் குஞ்சு வளர்ப்பு செய்திட உள்ளீடு செலவில் அதற்கான தொகை 1,௦௦,௦௦௦ லட்சம் ரூபாய் ஆகும் என கலெக்டர் கூறியுள்ளார். இதில் 40 சதவீதம் மானியமாக 6௦,௦௦௦ ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பம் உள்ளவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர், உதவி இயக்குனர் அலுவலகம், எண் 10, முதல் தளம், நித்தியானந்தம் நகர், வழுதரெட்டி, விழுப்பும் 605401 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கூறியுள்ளார். மேலும் விவரங்களுக்கு 04146-259329 என்று அலுவலக தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.