பொதுமக்களின் நலன் கருதி தொற்று ஏற்படாவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் வாரம் தவறாமல் ஞாயிற்றுக்கிழமை தோறும் இறைச்சி மீன்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் அதிகமானோர் கடைகளுக்கு திரண்டு வருவது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து மீனவர்களிடம் நேரடியாக தேவைக்கேற்ப மீன்களை வாங்கி கொண்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து இறைச்சிக் கடைகளின் முன்பாக பொதுமக்கள் முககவசம் அணிந்து மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பான முறையில் இறைச்சிகளை வாங்கி சென்றனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சமூக நலன் கருதி தொற்று பரவாமல் இருப்பதற்காக அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.