Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சட்டென பாய்ந்த மின்னல்…. கோவிலில் இருந்த சிலைகள்…. நாகப்பட்டினத்தில் பரபரப்பு….!!

மின்னல் பாய்ந்து கோவில் கோபுரத்தில் அமைந்துள்ள சுவாமி சிலைகள் சேதமடைந்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வாய்மேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதியில் நீர் தேங்கியது. இந்நிலையில் ஆயக்காரன்புலம் 4-ஆம் சேத்தியில் உள்ள ஏழுமேஸ்வரமுடையார் கோவிலில் மின்னல் பாய்ந்ததால் கோவில் கோபுரத்தில் உள்ள சுவாமி சிலைகள் சேதம் அடைந்து கீழே விழுந்தது.

மேலும் கோவில் கோபுரத்தில் தங்கியிருந்த 60-க்கும் மேற்பட்ட புறாக்கள் உயிரிழந்து விட்டது. கோவிலில் இருந்த மின்சார பெட்டியில் உள்ள பியூஸ் கேரியரும் வெடித்து மின்தடை ஏற்பட்டது. மேலும் மின்னல் தாக்கியதில் கோவிலில் உள்ள முருகன், விநாயகர் போன்ற சன்னதியில் இருந்த சாமி சிலையும் சேதம் அடைந்தது. இதுகுறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் பாலகுமார் மற்றும் வருவாய் ஆய்வாளர் நாகசுந்தரி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

Categories

Tech |