Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மின்னணு குடும்ப அட்டை…. 19 திருநங்கைகளுக்கு…. கலெக்டரின் தகவல்….!!

திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கும் சிறப்பு முகாம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

திருப்பத்தூரில் திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டை கொடுக்கும் சிறப்பு முகாம் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமையில் தாங்கி தொடங்கி வைத்து 19 திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டையை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து திருநங்கைகள் அனைவரும் மின்னணு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் உரிமை அட்டை மற்றும் உறுப்பினர் அடையாள அட்டை வைத்து இருக்க வேண்டும் என்றும் திருநங்கைகள் ஒன்றாக சேர்ந்து தங்களின் பிரச்சினைகள், தேவைகள் குறித்து மனு கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலெக்டர் தெரிவித்துள்ளார். இந்த முகாமில் மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் முன்னிலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்றனர். மேலும் வட்ட வழங்கல் அலுவலர்கள் கண்ணன், நடராஜன், காஞ்சனா, செல்வராஜ் மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |