மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரண தொகையை கூடுதலாக தரவேண்டும் என்று மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கு தற்போது 5 ஆயிரம் ரூபாய் தடைக்காலதிற்கான நிவாரணம் தொகை கொடுக்கப்பட்டு வருகின்றது. இந்த உதவித் தொகையை 10 ஆயிரம் ரூபாயாக தர வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் மூன்று ஆண்டுகள் கடந்தும் இதுகுறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் 150 மீனவர்களுக்கு இந்த ஆண்டிலேயே உரிய உதவித்தொகை கொடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் தகுதியுள்ளவராக இருக்கும் 150 மீனவர்களுக்கும் இந்த உதவித்தொகையை வழங்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்கம் சார்பில் கோவளத்தில் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு மீன்பிடி தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் தனிஷ் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இந்தப் போராட்டத்தில் பெண்களும் கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முக கவசம் அணிந்து போராட்டங்களை நடத்தியுள்ளனர்.