நடிகை பூஜா ஹெக்டே கொரோனாவில் இருந்து மீண்டதாக தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகர் ஜீவா நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘முகமூடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தற்போது விஜயின் வரும் ‘தளபதி65’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வந்தது.ஜார்ஜியாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பிய பூஜா ஹெக்டேவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே தான் கொரோனாவில் இருந்து மீண்டுதாக தெரிவித்துள்ளார்.