கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அத்தியாவசிய தேவையின்றி மாவட்டங்கள் நகரங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது. மக்கள் ஏதாவது அவசர காரணங்களால் மாவட்டம் மற்றும் நகரங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் இ பாஸ் பெற்றுக் கொண்டு தான் செல்ல வேண்டும் என்று கூறியிருந்தனர். கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் தளர்வுகள் ஏற்படவே இ பாஸ் ரத்து செய்யப்பட்டது.
ஆனால் தற்போது மீண்டும் கொரோனாவின் 2 வது அலை வேகமெடுத்திருப்பதால் மராட்டிய மாநிலத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது .மக்கள் அவசர தேவைகளுக்காக மாவட்டத்தை விட்டு செல்ல வேண்டும் என்றால் கட்டாயம் இ பாஸ் பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இது பற்றி மாநில டி.ஜி.பி. சஞ்சய் பாண்டே, “வெள்ளிக்கிழமை (நேற்று) முதல் இ-பாஸ் முறை மீண்டும் அறிமுக படுத்தியுள்ளதாகவும் மிகவும் அவசரம் என்றால் மட்டும் பொதுமக்கள் இதை பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.மேலும் பொது மக்கள் இ பாஸ் பெறுவதற்கு covid19.mhpo.in என்ற இணையதளத்தில் முகவரி உரிய ஆவணங்கள் என அனைத்தையும் தகுந்த காரணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் ஆன்லைன் மூலம் இ பாஸ் பெற முடியாதவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.இதனை தொடர்ந்து மும்பையில் போலீசார் அத்தியாவசிய தேவைகளுக்காக இயக்கப்படும் வாகனங்களில் சிவப்பு, பச்சை, மஞ்சள் நிற ஸ்டிக்கரை ஒட்ட உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.