ஆய்ச்சி மாகாணத்தில் 11 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பறவை காய்ச்சல் பரவியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பான் நாட்டின் ஆய்ச்சி என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் கோழி பண்ணை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கோழி பண்ணையில் வழக்கத்துக்கு மாறாக அதிக எண்ணிக்கையில் கோழிகள் இறந்துள்ளன. இதனைத் தொடர்ந்து இறந்து போன கோழிகளை பரிசோதித்தப் போது அவை பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்தது. இங்கு 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பறவை காய்ச்சல் வந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பறவை காய்ச்சலை தடுக்கும் விதமாக மாகாணம் முழுவதிலும் உள்ள சுமார் 3 லட்சத்தை 10 ஆயிரம் கோழிகளை அழிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதேபோன்று கோஹிமா என்ற மாகாணத்திலும் பறவை காய்ச்சல் பரவியுள்ளதால் 34,000 கோழிகள் அழிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இதுவரை 33 லட்சம் கோடிகள் அழிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.