Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மீண்டும் பதப்படுத்தப்பட்ட உணவு…. உரிமையாளருக்கு நோட்டீஸ்…. அதிகாரிகளின் எச்சரிக்கை….!!

உணவகங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து 5 கடை உரிமையாளர்களுக்கு  நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவின்படி உணவு பாதுகாப்பு, நியமன அதிகாரி தங்க விக்னேஷ் மற்றும் அதிகாரிகள் காந்திஜிரோட்டில் உள்ள ஒரு உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குளிர்சாதன பெட்டியில் முதல் நாள் சமைத்த அசைவ உணவுகள் பதப்படுத்தி வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்த உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டு இருந்ததும் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனையடுத்து அந்த உணவுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து குப்பைத் தொட்டியில் கொட்டி அழித்தனர்.

இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதுகுறித்து அதிகாரி தங்க விக்னேஷ் கூறியபோது, இந்த மாநகராட்சிக்கு உட்பட்ட 17 உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டு ஏற்கனவே சமைத்த உணவுகள் மீண்டும் பதப்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே பதப்படுத்தப்பட்ட 40 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 5 உணவகங்களின் உரிமையாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டதாக அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் 2 உணவகங்களில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியகாக உரிமையாளருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

அதன்பின் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உணவில் நிறத்தினை சேர்க்கக் கூடாது என்று உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாக அதிகாரி தெரிவித்துள்ளார். இதனைதொடர்ந்து உணவகங்களின் தேவைக்காக கடையில் வாங்கப்படும் இறைச்சிக்கு உரிய ரசீது பெற்றிருக்க வேண்டும். அதன்பின் ஒருமுறை சமையலுக்கு பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. மேலும் உணவகங்களில் தரமில்லாத உணவு பொருட்கள் இருப்பது தெரியவந்தால் பொதுமக்கள் 94440 42322 என்ற செல்போன் எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |