தமிழ் சினிமாவின் முன்னணி டைரக்டரான பாரதிராஜா, இப்போது நடிப்பிலும் கவனம் செலுத்துகிறார். இவர் தனுஷ் உடன் இணைந்து நடித்து அண்மையில் வெளியான திருசிற்றம்பலம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து பாரதிராஜா இயக்குனர் தங்கர் பச்சான் டைரக்டு செய்யும் “மேகங்கள் கலைகின்றன” திரைப்படத்தில் முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.
இதற்கிடையில் பாரதிராஜாக்கு சென்ற ஆகஸ்ட் 24ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக படப்பிடிப்பு தாமதம் ஆனது. இந்தநிலையில் 2 மாதம் இடைவெளிக்கு பின் பாரதிராஜா மீண்டுமாக தங்கர் பச்சான் சூட்டிங்கில் இணைந்துள்ளார்.