புராதன சின்னங்கள் திறக்கப்பட்டு கட்டணம் இன்றி பார்க்க கூடிய அர்ச்சுனன் தபசு சின்னங்களை மக்கள் பார்த்துள்ளனர்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை போன்ற மாவட்டங்களில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதன்படி மாமல்லபுரம் புராதன சின்னங்கள் இன்று முதல் திறக்கப்பட்டு கடந்த சில நாட்களாக மக்கள் வரத் தொடங்கியிருக்கின்றன.
இதனையடுத்து விடுமுறை தினமான (நேற்று) ஞாயிற்றுக் கிழமை அன்று அதிக அளவு பயணிகள் மாமல்லபுரம் வந்திருந்தனர். அவர்கள் கட்டணமில்லாமல் பார்ப்பதற்கு கூடிய அர்ச்சுனன் தபசு சின்னத்தை கண்டுகளித்தனர். அதன்பின் கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைகல் போன்ற புராதன சின்னங்கள் நேற்று திறக்கப்படாததால் நுழைவு வாயில் பகுதியிலேயே நின்று பலரும் பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.