Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மீண்டும் திறந்தாச்சு…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…. அதிகாரிகளின் வலியுறுத்தல்….!!

ஊரடங்கிற்கு பிறகு உழவர் சந்தை மீண்டும் செயல்பட தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் உழவர் சந்தை செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் உழவர் சந்தை அடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வருவதால் மீண்டும் உழவர் சந்தை செயல்பட தொடங்கி இருக்கின்றது.

இதனால் பெரும்பாலான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து காய்கறிகளை வாங்கிச் சென்றனர். இவ்வாறு உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அனைவரும் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தி இருக்கின்றனர். எனவே மீண்டும் செயல்பட தொடங்கிய உழவர் சந்தையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |